உளுந்தூர்பேட்டை, ஜனவரி 8:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உபகோட்டத்திற்குட்பட்ட கிராமிய மேற்கு உளுந்தூர்பேட்டை மின்வாரியப் பிரிவில், வீட்டு மின் இணைப்பின் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்த மின் நுகர்வோருக்கு, ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக பெயர் மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது.
விண்ணப்பம் பெறப்பட்ட உடனேயே துரிதமாக செயல்பட்டு, பெயர் மாற்ற உத்தரவை வழங்கிய தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரிகளின் நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்ற உத்தரவினை, உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் அவர்கள் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரிடம் வழங்கினார். பெயர் மாற்ற உத்தரவு உடனடியாக கிடைத்ததைத் தொடர்ந்து, மின் நுகர்வோர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், பொதுமக்கள் நலன் கருதி விரைந்து செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, இளநிலை பொறியாளர் அம்சலட்சுமி, உதவி பொறியாளர் செந்தமிழ்ச்செல்வன், வணிக ஆய்வாளர் கணபதி, வணிக உதவியாளர் கோபி உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர். மின்சார சேவைகளில் வெளிப்படைத்தன்மையும், துரித செயல்பாடும் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

No comments:
Post a Comment